"தொலைபேசி மூலம் பேசிய காலம் யாவும்
தொலைந்தே போயின...
கைப்பேசியாய் எந்தன் கைகளுக்கு
அடக்கமாய் நீ வந்தாய்...!
வெளியாட்களோடு நான் பேசிய வார்த்தைகளைவிட
உன்னுடன் நான் பேசிய ரகசியங்கள் ஏராளம்...
சிலசமயம், பகலின் நீளம் நரகமாகிறது
பலசமயம், இரவின் நீளம் உன்னால் அர்த்தப்படுகிறது...!
அம்மா அப்பாவிற்கு உன்னை இயக்கப் பயிற்றுவிப்பதன் மூலம்
என்னையும் ஆசிரியை ஆக்கி அழகு பார்க்கிறாய்...
என் உறவுகளைப் பிரியும் தருணம்,
நீ வந்தாய் என் புரிதலாய்...
உன்னைக் கையில் வைத்தே அலைகிறேன் எப்பொழுதும்...
என்னை உனக்குள் மூழ்கச் செய்கிறாய் முப்பொழுதும்...!
கைக்கடிகாரத்தையும் கணிப்பொறியையும்
கைக்குள் அடக்கிவிட்டாய்...
நீ இல்லாமல் வாழ்வில்லை
என்ற நிலையில் பலரும்...
எனினும் அகம்பாவம் வேண்டாம் கைப்பேசியே...
உன் இடத்தையும் பிடிக்க
ஒரு புதிய தொழில்நுட்பம் விரைவில்...!"

Aishu itz really a wonderful presentation.... azhagana korvayana tamizh vaarthaigalaal aana arputhamaana padaippu.....
ReplyDeleteThank you so much Shreedhana:-)
DeleteThis comment has been removed by the author.
DeleteEvery line s. Touching...nice aish
DeleteEvery line s. Touching...nice aish
DeleteHahahahahaha...... semma
ReplyDeleteEna siripu Gautham?? thank you:-)
DeleteNice one ishwarya😊
ReplyDeleteThank you mam:-)
DeleteSoopr madam.. Menmelum ungal kirukalgal perugatum... Vaazhthukal
ReplyDeleteHaha..:-D nandri harshima..:-)
DeleteThis comment has been removed by the author.
DeleteThis s awesome.... I agreed u hav observed lot rather than using the mob :) congrats way 2 go aishu....
DeleteThank you udhaya anna..:-)
DeleteSuper👏👌
ReplyDelete