
காதுமடல் உரசி ரகசியம் பலபேசி,
காணாமல் போன உயிர் மீட்டெடுத்து,
என்னுடன் நீ பேசிய மொழி - இசை!!
மழைநாளின் ஜன்னல் ஓரத்திலும்,
மாலைப்பொழுது சாயும் நேரத்திலும்,
உன்னோடு நான் கழித்த தனிமை - சுகம்!!
தோழிகள் அற்ற தருணத்திலும்,
நாழி நகரா நடுநிசியிலும்,
நீ வந்தாய் என் தனிமை நீக்கியாய்...!!
நீ இல்லா மழைநாளில், பேருந்தின்
ஜன்னலோரக் குளிர்காற்றும் அனலாய்..!!
தூக்கமற்ற இரவுகளின் தூக்கமாத்திரையும் நீ...
தூங்க மறுக்கும் உணர்வுகளின் தாலாட்டும் நீ...!!
உன்னைப் பாலினம் பிரித்துப்
பேதப்படுத்தத் தோன்றவில்லை..
என் சகலமுமாய் உன்னைப் பாவிக்கிறேன்..
ஒருதலைக் காதலின் சுகம் உணர்த்தும், என்
இருதலைக் காதணியே...
உன் மீது நான் கொண்ட ஒருதலைக்காதல்
எந்நாளும் நீங்காது தலையணியே..!!
காணாமல் போன உயிர் மீட்டெடுத்து,
என்னுடன் நீ பேசிய மொழி - இசை!!
மழைநாளின் ஜன்னல் ஓரத்திலும்,
மாலைப்பொழுது சாயும் நேரத்திலும்,
உன்னோடு நான் கழித்த தனிமை - சுகம்!!
தோழிகள் அற்ற தருணத்திலும்,
நாழி நகரா நடுநிசியிலும்,
நீ வந்தாய் என் தனிமை நீக்கியாய்...!!
நீ இல்லா மழைநாளில், பேருந்தின்
ஜன்னலோரக் குளிர்காற்றும் அனலாய்..!!
தூக்கமற்ற இரவுகளின் தூக்கமாத்திரையும் நீ...
தூங்க மறுக்கும் உணர்வுகளின் தாலாட்டும் நீ...!!
உன்னைப் பாலினம் பிரித்துப்
பேதப்படுத்தத் தோன்றவில்லை..
என் சகலமுமாய் உன்னைப் பாவிக்கிறேன்..
ஒருதலைக் காதலின் சுகம் உணர்த்தும், என்
இருதலைக் காதணியே...
உன் மீது நான் கொண்ட ஒருதலைக்காதல்
எந்நாளும் நீங்காது தலையணியே..!!
Nice lines aishu...keep going
ReplyDeleteதாலாட்டும் நீ...! தூக்கமாத்திரையும் நீ...!
ReplyDeleteவரிகள் என்றும் வாழும்...!!!